பொதுநலவாய நாடுகளின் தலைவரான, மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் ”மகாராணியின் மறைவு குறித்து பிரித்தானியாவின் அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய துக்க காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.