கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தர்கா நகரினை சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததால் சிகிச்சைக்காக தர்கா நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் களுத்துறை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
எனினும், 3 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நோய் கண்டறியப்படவில்லை எனவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.