எகிப்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்தவர்களில் 25 பேர் உயிரிழந்தனர்.
33 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 கிலோமீட்டர் தெற்கே உள்ள அல்-மின்யா கவர்னரேட்டில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையோரம் டயரை மாற்றுவதற்காக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.