வங்காள தேசத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

வங்காள தேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

சிலேட் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், படகுகள் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சிலர் விஷப் பாம்புக் கடி மற்றும் மின்னல் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.