வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் போட்டியிடப் போவதில்லை 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்துக் கருத்துரைத்த அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தெற்கில் உள்ள தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடாத நிலையில், தெற்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு தங்களது தரப்பு எதிர்பார்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.