வடக்கு மீனவர்கள் பாதிப்பு தொடர்பில் நீதிமன்றை நாட நடவடிக்கை.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 வடமாகாணத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நேற்று  இடம்பெற்றுள்ளது.

நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்தொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.