இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழு இலங்கை போக்குவரத்து சாலையின் சாலைகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய சாரதி நடத்துனர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமது பணிப் புறக்கணிப்புக்கான காரணங்களை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் நாளைய தினம் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும், தவறும் பட்சத்தில் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனர், சாரதிகளும் குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.