வரிசையில் நின்ற போது பிறந்த குழந்தை பலி.

கொழும்பு பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் நேற்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாக கொழும்பு காசல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

ஹட்டனைச் சேர்ந்த குறித்த பெண் இன்று காலை பாஸ்போர்ட் வரிசையில் நின்று கொண்டிருந்த போது பிரசவ வலியால் துடித்துள்ளார்.

கர்ப்பிணி வலியால் துடிப்பதைக் கண்டு ராணுவ வீரர்கள் அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

எனினும் அதற்குள் குறித்த கர்ப்பிணி குழந்தை பிரசவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.