வலப்பனையில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு!

மர்மமான நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை, குருந்து ஓயாவில் இருந்து குறித்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.