வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து. ; பொலிஸ் உத்தியோகத்தர் பலி.

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது.

தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவுக்கு அருகில் மோட்டார் சைக்கிலுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சடலம் குறித்த பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன் வசந்த சந்தன நாயக்க என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.