வாகனத்தின் மீது ரயில் மோதி 7 பேர் பலி.

ஹங்கேரியில் ஆளில்லா ரயில்வே கடவை தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனத்தின் மீது ரயில் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ரயில்வே  கடவையை  வாகனம் ஒன்று கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த ரயில் மோதி சில மீட்டர் துரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.