விக்ரம்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. ; அதிர்சியில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரமுக்கு நேற்றைய தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இவருக்கு திடீரென அதிக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரம் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

விக்ரமின் உடல்நிலை பற்றிய முழு விவரங்கள் விரைவில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.