விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை.

150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6ம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசாவின் கூற்றுப்படி 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 FZ3 என்ற விண்கல் ஏறத்தாழ 42 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்தில்லை என நாசா தெரிவித்துள்ளது.