தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர்.
மெடலின் பகுதியில் 8 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திரம் செயலிழந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்து பெலன் ரோசல்ஸ் செக்டாரில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்தால் குடியிருப்புகளில் தீப்பற்றி 7 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.