ஊதியத்தை மாற்றியமைக்க கோரி இண்டிகோ உள்ளிட்ட சில விமான நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இந்த விமான நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானிகள் உள்ளிட்டோர் கொரோனா தொற்று காலத்துக்கு முந்தைய நிலைப்படி தங்கள் ஊதியத்தை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
விமானத்தின் பொறியியலாளர்கள் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்டோரும் பணிக்கு வராமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.