வியட்நாமின் ஹோ சி மின்ஹ் (Ho Chi Minh) நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தினால் தீக்காயங்களுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டி உள்ளது. என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தீ விபத்தின் போது களியாட்ட விடுதியில் 150 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.