விரைவில் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள KGF 2.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் கலக்கிய தமிழ் படங்களை விட வேறு மொழிப்படங்கள் தான் அதிகம்.

அந்த லிஸ்டில் முதலில் இருப்பது கன்னட மொழியில் தயாரான யஷ் நடித்த KGF 2 தான்.

விறுவிறுப்பின் உச்சம், அடுத்து என்ன நடக்கப்போகிறது என திரையரங்கில் பார்த்த அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்த திரைப்படம் KGF 2.

முதல் பாகமே படு ஹிட் தான், அப்போதில் இருந்தே இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார்கள்.

பிரசாந்த் நீல் இயக்க யஷ் நடித்த இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது, ஆனால் படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா, ரூ. 1200 முதல் ரூ. 1300 கோடி வரை என்கின்றனர்.

KGF முதல் பாகம் பல முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிட்டது, இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது இப்பட இரண்டாம் பாகம் விரைவில் ZEE Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

ஆனால் எப்போது, என்று என எந்த விவரமும் தெரியவில்லை.