விளையாடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த வீரர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வீரர் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரேசிங் கிளப் அணியின் தடுப்பாட்ட வீரர் முஸ்தபா சைல்லா மைதானத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக அணி  நிர்வாகம் அறிவித்துள்ளது.