விவசாய கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது சிறுமி பலி.

வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்ட போதிலும், பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.