வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் மூவர் உட்பட 10 பேர் பலி.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில்   வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் ஐந்து, ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என பென்சில்வேனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தீப்பிடித்ததாகக் கருதப்படுகிறது.