வெனிசுலாவில் கனமழை. ;  7 பேர் பலி.

வெனிசுலாவில் அன்சோடேகுய் மாகணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

மலைப்பாங்கான புவேர்டா டி லா குரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.