வெற்றிமாறனின் விடுதலை  படப்பிடிப்பில் விபத்து. ; சண்டை பயிற்சியாளர் பலி.

வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. இதில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் .

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னையில்  படப்பிடிப்பு நடந்த போது ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.

இன்று சென்னை கேளம்பாக்கத்தில்  படப்பிடிப்பு நடந்து வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம் சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.