வெள்ளவத்தையில் விபத்து  ; 23 வயது இளைஞர் பலி

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்தும், துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பழைய ஹெவ்லொக் வீதியில், மாயா அவென்யூ ரவுண்டானாவில் இருந்து பாமன்கடை சந்தியை நோக்கிச் சென்ற துவிச்சக்கர வண்டியை பேருந்து சாரதி முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.