வேனும், சரக்கு வாகனமும் விபத்து. ; குழந்தை உள்பட 7 பேர் பலி.

நியூசிலாந்தில் வேனும்,  சரக்கு வாகனமும்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ப்ளென்ஹெய்ம்  பிக்டன்  ஆகிய நகரங்களுக்கு இடையே குளிர்சாதன பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும், வேனும் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த  சரக்கு வாகன  சாரதி உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.