வேறொரு பெண்ணுடன் தயாரிப்பாளர்.  ; தட்டிக்கேட்ட மனைவி மீது கொலை முயற்சி .

மும்பையில், வேறொரு பெண்ணுடன் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது, காரை ஏற்றிய இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஷ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் கமல் கிஷோர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி, கமல் கிஷோர், வீட்டின் கார் பார்க்கிங்கில் வேறொரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட மனைவி தட்டிக்கேட்ட போது, கமல் கிஷோர் அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் கால்கள் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த கமல் கிஷோரின் மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.