வைத்தியசாலையின் மருந்தகம் தீக்கிரை.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருந்தகம் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம். என நம்பப்படுகிறது.

  இருப்பினும் மருத்துவ சேவைகள் தடையின்றி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவ சேவை தடையின்றி நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிசாரும், தடயவியல் பிரிவினரும் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.