ஸ்காட்லந்தில் மாதவிடாய்ப் பொருள்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
இலவச மாதவிடாய்ப் பொருள்களுக்கான உரிமை சட்டபூர்வமாய்ப் பாதுகாக்கப்படுவது உலகில் இதுவே முதல்முறை என ஸ்காட்லந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி மாதவிடாய்ப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவை பல்வேறு மாதவிடாய்ப் பொருள்களைக் கழிவறைகளில் இலவசமாக வழங்கவேண்டும்.
2017ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லந்தின் கல்வி நிலையங்களில் அவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
அதற்காக ஸ்காட்லந்து அரசாங்கம் பல மில்லியன் பவுண்ட் செலவிட்டுள்ளது. தற்போதைய புதிய சட்டம் அதைச் சட்டபூர்வ நிபந்தனை ஆக்கியுள்ளது.
இந்நிலையில் மாதவிடாய்ப் பொருட்களை இலவசமாக வழங்குவது சமத்துவத்திற்கும், கண்ணியத்திற்கும் முக்கியம் என ஸ்காட்லந்தின் சமூக நீதி அமைச்சர் கூறினார்.