“ஹாரி பாட்டர்” திரைப்பட நடிகர் காலமானார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜேகே ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகம் உலக அளவில் பிரபலம் ஆனது.

இந்த புத்தக கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் படங்கள் உலகம் முழுவதும் நன்றாக ஓடியது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராபி கால்ட்ரேன்.

பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்த 72 வயதான ராபி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவரது மரண செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.