ஹோட்டலில்  துப்பாக்கிசூடு – இருவர் பலி

அம்பலாங்கொட தெல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த 5 பேர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அம்பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.