அக்குரணையில் தீ பரவல்!

கண்டி, அக்குரணை நகரிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி இடம்பெற்று வருவதாக அக்குரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.