அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு ; வர்த்தகர் பலி

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். க்ளப் வசந்த என அழைக்கப்படும் வர்த்தகர் ஒருவரே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே.சுஜீவாவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.