அமெரிக்காவில் துப்பாக்கி சூடு. ;  2 பேர் பலி.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

கூட்டத்தினர் அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறியோடினர்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.