அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் இன்றைய தினம் (27) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் பின்னர் 57 மேலதிக வாக்குகள் வித்தியாத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த போது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவசர நிலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, இந்த அறிவிப்பை வெளியிட்ட 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும், இல்லையெனில் அது ரத்து செய்யப்படும்.
இதேவேளை பாராளுமன்றம் ஆவணி மாதம் 9 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.