2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மாலை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C17 Globe master விமானங்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.
கிரீஸ்ஸில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்களில் பெருமளவு ஆயுதங்கள் இருந்ததாகவும், பலவிதமான படைத்துறை உபகரணங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டாலும், அந்த விமானங்களில் எப்படியான ஆயுத தளபாடங்கள் இருந்தன என்றோ, அந்த ஆயுத தளபாடங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்றோ தகவல்கள் எதும் வெளியாகியிருக்கவில்லை.