இணையத்தளம் ஊடாக நிதி மோசடி – 115 இந்தியர்கள் கைது!

இலங்கையில் இருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 115 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பல பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின் போது குறித்த 115 பேரும் கைதாகினர்.
 
தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு – கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைதாகினர். கைதானவர்களிடம் இருந்து மடிக்கணினி, கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இதேவேளை, இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வைத்து 33 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
கைதானவர்கள் பாகிஸ்தான், நேபாளம், மலேஷியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.