இன்ஃப்ளூவன்ஸா குறித்து பொதுமக்களிடம் எச்சரிக்கை.  

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்துள்ளார்.

இந்த இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.