இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 31 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று ஏற்ற, இறக்கம் கண்டுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 376.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 448.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 430.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
குவைத் தினாரின் பெறுமதியானது 1176.60 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.07 ரூபாவாக காணப்படுகிறது.