2022 T-20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சஹீன் சாஹ் அப்ரிடி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் ரிஷ்வான் 57 ஓட்டங்களையும் பாபர் அஹாம் 53 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டனர்.
மொஹமட் ஹரிஸ் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ட்ரன்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதேவேளை, நாளைய தினம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.