இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், (Jean Francois Pactet) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1970 ஆம் ஆண்டு பிறந்த Jean Francois Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக கடமையாற்றி வந்தார்.
தொழில் ரீதியான இராஜதந்திரியான அவர் முன்னர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்தார்.