இலங்கைக்கு இன்று 3 எரிபொருள் கப்பல்கள்.

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவற்றில் தலா 40,000 மெட்ரிக் டன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40, 000 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்படவுள்ளது.

எனினும், கடந்த இரண்டு வாரங்கள் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குதல் தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உயர்நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனு விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.