இலங்கையில் இருந்து அனுப்பப்படவுள்ள செயற்கைக்கோள்

ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த அறிவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.