இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் திடீரென பணக்காரர்களாகி விட்டதாகவும், அவர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு வரும் நேரடி முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, தொலைபேசியிலும் முறைப்பாடுகள் வருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கிடைக்கப்பெறும் ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பிலும், விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.