தென் மாகாணத்திற்கு முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வீதியில் பொருத்தப்பட்டிருந்த அறிவிப்பு பலகை ஒன்று தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“முன்னால் மயில்கள் அவதானம்” என தமிழிலும் “முன்னால் ஆபத்தான மயில்கள் ” அந்த அறிவிப்பு பலகையில் எழுத்தப்பட்டுள்ளதுடன் “மயில்கள் அதிகம் காணப்படும் பிரதேசம்” என்ற அர்த்தத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் தனது வாழ்நாளில் எப்போதும் ஆபத்தான மயில்களை கண்டதில்லை எனக் கூறியுள்ளார்.
“ திங்கள் கிழமை காலை வணக்கம்!.
நான் வீதியில் பயணித்து கொண்டிருக்கின்றேன். தென் மாகாணத்திற்கான எனது முதல் உத்தியோகபூர்வ விஜயம்.
முதல் அவதானிப்பு – நான் எப்போதும் ஆபத்தான மயில்கள் பற்றி சிந்தித்ததில்லை. எனினும் அவற்றை தேடுவதை என்னால் நிறுத்த முடியாது” என அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.