ஈராக் – சிரியா எல்லையில் கச்சா எண்ணெய், ஆயுதங்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மீது திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவின் எல்லை நகரங்களில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் இருந்தவாறு இந்த கிளர்ச்சி படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
இந்த கிளர்ச்சி படைகள் ஒழிக்கும் நடவடிக்கையாக சிரியாவின் எல்லைக்குள் சிரியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவுடனான எல்லையை இணைக்கும் ஈராக்கின் அல்-குவாம் நகரில் நேற்று 10-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக சென்றுகொண்டிருந்தன.
ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு செல்லும் இந்த லாரிகளில் கச்சா எண்ணெய் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களும் கொண்டு செல்லப்பட்டன.
அப்போது, அந்த லாரிகள் மீது திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்று இதுவரை தெரியவில்லை.
ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு ஆயுதங்கள், கச்சா எண்ணெய்யை கொண்டு சென்ற லாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் பிண்னனியில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.