தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம் : இலங்கை தொடர்பான விசயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும்
என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது. தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள். தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும் என்பதை இச்செயற்குழு அறிவிக்கிறது.
26 தீர்மானங்கள் என்னென்ன?
- கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்
- கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
- மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானம்
- ஜனநாயக கொள்கை தீர்மானம்
- பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
- சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
- மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்
- விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
- கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரும் தீர்மானம்
- ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்.
- மொழி கொள்கை தீர்மானம்
- மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்
- சட்டம் – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
- மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க தீர்மானம்
- மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கை தீர்மானம்
- உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்
- தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு தீர்மானம்
- விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்
- கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்
- முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய தீர்மானம்
- இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
- இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்
- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்
- தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்
- ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்
- கட்சி நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம்