உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போரின் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தியதால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
ஆயுதங்களை மோசமாகக் கையாளுதல், அதிகப்படியான மதுப்பழக்கம் போன்றவைகளால் ரஷ்ய ராணுவத்தினர் தங்களைத் தாங்களே காயப்படுத்தி கொண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சாலை விபத்துக்கள், தாழ்வெப்பநிலை போன்றைவைகளும் ரஷ்ய ராணுவத்தினரின் உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.