எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு வேலைத்திட்டத்தை முன்வைக்காவிட்டால் எதிர்வரும் 18ஆம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.

மக்களைக் குழப்பாத வேலைத்திட்டத்தை முன்வைத்து அரசியல் சாசனப் பதில் தேவை என்றும், அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட காட்டுச் சட்டம் தேவையில்லை என்றும் அந்நிலையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அனைத்தையும் குழப்பி ஜனாதிபதிக் கதிரையைக் கைப்பற்றுவதே ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போராட்டம் ஏற்கனவே பாசிசப் போராட்டம் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெயரிடப்பட்டுள்ள தாகவும் அதனால் இலக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.