எரிசக்தி சந்தைகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும். என புடின் எச்சரிக்கை.

ரஷ்யா மீது இன்னும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டால் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) எச்சரித்துள்ளார்.

தடைகள் விதிக்கப்பட்ட போதும் ரஷ்யாவின் எரிபொருள், எரிசக்தித்துறை தொடர்ந்து சீராகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

அத்துடன் உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலில் ஈடுபடுகின்றன.

உக்ரைன் அரசாங்கதைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியர் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளின் பேச்சைக் கேட்டு உக்ரைனும் அந்த திசையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறதாகவும் புடின் (Vladimir Putin)  குறிப்பிட்டார்.

இந்நிலையில் அமெரிக்கா, துரித ஆற்றல் கொண்ட 4 ஏவுகணை அமைப்புகளைக் கொடுக்கவிருக்கிறது.