கஜமுத்துகளுடன் ஐவர் கைது.

சீனப் பிரஜை ஒருவருக்கு 05 கஜமுத்துகளை 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து இன்று (25) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை நீதவான் நீதிமன்ற ஆவணக் காப்பகத்தின் ஊழியர் ஒருவரும், வழக்கு அறை ஊழியர் ஒருவரும், ரத்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் கஜமுத்து இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.