கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி காலை கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்று மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், சந்தேகநபர் ஒருவரையும் மாவனல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது சாரதியினால் அந்த வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதன்படி குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி – வத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.